பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையின் போது எதிர்கட்சியினரால் ஏற்பட்ட இடையூறு காரணமாக பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி, முற்பகல் 10.40 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார்.
இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த நிலையில், எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.