கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இடம்பெறவில்லை . இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பெப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் தடை பெறவுள்ளது.
லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் இந்த ஆண்டு களமிறங்கவுள்ள நிலையில், இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சகனர் ஸ்ரீசாந்த் ரூ.50 இலட்சம் அடிப்படை விலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீசாந்த் தன்னுடைய பெயர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றதற்கான மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:- எல்லோரையும் நேசிக்கிறேன். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னால் அது போதாது. உங்களின் ஒவ்வொருவருக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து இறுதி ஏலத்தில் எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். ஓம் நம சிவாய இவ்வாறு ஸ்ரீசாந்த டுவீட் செய்துள்ளார்.