இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதிக் கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது. இதன்மூலம் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 3 நாட்கள் செல்லும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.