எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.