எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு

அடுத்த மாதத்தின் முற்பகுதியில் எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  விலைச்சூத்திரத்திற்கு அமைய இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். 

தற்போது 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,186 ரூபாவாக அமைந்துள்ளது. 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 1,281 ரூபாவிற்கும்  2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 598 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Spread the love