ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம்

ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் அவர்கள், இலங்கைக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்த போது, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை நேரில் வருகை தந்து பார்வையிட்டுள்ளார்.  

ஆணைக்குழு உறுப்பினர் ரியாஸ் மிகுலர் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான பணிப்பாளர் விந்தியா வீரசேகர, CHEC Port City Colombo (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளரான யாங் லூ ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட திரு. கமரூன் அவர்கள் அரச-தனியார் கூட்டாண்மையின் அம்சங்களையும், பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் இத்திட்டத்தின் வினையூக்கமான வகிபாகத்தையும் கேட்டறிந்து கொண்டார். இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் பணிப்பாளர் நாயகமான ரேணுகா வீரக்கோன் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

முன்னாள் பிரதமருக்கு விளக்கமளித்த CHEC Port City Colombo (pvt) Ltd இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரான துல்சி அலுவிஹார அவர்கள், வணிகங்கள் கொழும்பு துறைமுக நகரத்தைப் பிராந்தியத்தை அணுகுவதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்கான இலக்கினை ஈர்க்கும் வகையில் உருவாக்குவதே இலட்சியம் என்று விளக்கினார். மேலும், கவர்ச்சிகரமான ஒழுங்குமுறை நிர்வாக ஆட்சியுடன், கொழும்பு துறைமுக நகரமானது அதன் செலவுரீதியான போட்டி அனுகூலம் மற்றும் கவர்ச்சிகரமான வாழ்க்கைத் தரத்துடன் சிங்கப்பூர் மற்றும் டுபாய்க்கு மாற்று இடமாக நிலைநிறுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

தெற்காசியாவில் இதே போன்ற இடங்களுடன் ஒப்பிடுகையில், இத்திட்டத்தின் தனித்துவமான விற்பனை முன்மொழிவுகள் பற்றிய திரு. கமரூனின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, திரு. அலுவிஹார அவர்கள், கொழும்பு துறைமுக நகரத்தின் புவியியல் அமைவிட அனுகூலத்திற்கு அப்பால், வணிக நடவடிக்கைகளை  இலகுவாக முன்னெடுப்பதில் நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகளின் விரிவான அம்சங்களை இது வழங்குகிறது என்று விளக்கினார். இந்த ஆணைக்குழுவானது ஒரு ஒற்றை மார்க்க முதலீட்டு அனுசரணையாளராக உள்ளதுடன், இது மாறும் விதிமுறைகள், தாராளமய அந்நிய செலாவணி ஆட்சி, திறந்த தொழிலாளர் சந்தை மற்றும் கவர்ச்சிகரமான முதலீட்டு ஊக்குவிப்புகளை செயல்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இலங்கையின் முதல் திட்டமிடப்பட்ட அபிவிருத்தி நகரமாக, கொழும்பு துறைமுக நகரமானது, சூழல்நேய மற்றும் திறன் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கவர்ச்சிகரமான வாழ்க்கைச் சூழலை உருவாக்கும்.

திரு. கமரூனின் இச்செயற்திட்டத் தளத்திற்கான விஜயம் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு கொழும்பு துறைமுக நகரத்தை ஊக்குவிப்பதில் மகத்தான ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. 2023 இல் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தைப் பார்வையிட்ட முதல் உயர்மட்டப் பிரதிநிதியும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love