உக்ரேய்ன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சத்தின் மத்தியில் நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்க முடிவை ரஷ்யா கண்டித்துள்ளது.
உக்ரேய்ன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. உக்ரேய்ன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. அதுமட்டுமின்றி, பிரித்தானியா, அமெரிக்கா, போலாந்து உக்ரேய்னுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளன. அமெரிக்காவின் இம் முடிவு பதற்றத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது மற்றும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பைக் குறைத்துள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.