ஐ.நா தீர்மானங்களால் நல்லிணக்கம் ஏற்படாது

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் நல்லிணக்கம் ஏற்படாது. இலங்கை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றது. உள்ளகப் பொறிமுறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, சர்வதேசத்திடம் இருந்து நட்பு ரீதியான அணுகுமுறையையே எதிர்பார்க்கின்றது.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது. உலகில் இன்று பல பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன. அவை இன்று வெடிக்கும் கட்டத்துக்கு வந்துவிட்டன. இப்படி உலகில் பல பிரச்சினைகள் இருக்கும் போது, இலங்கை மட்டும் இலக்கு வைக்கப்படுவது ஏன்? இது நியாயமா? உலக அமைதிக்கு இலங்கையால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படுவதில்லை. நல்லிணக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இது உணர்வுபூர்வமான விடயமாகும். இப்பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வை கண்டுவிட முடியாது. நீடித்து நிலைக்கக் கூடிய நிலையானதொரு தீர்வை நாம் எதிர்பார்க்கின்றோமெனில், அதற்கான பொறிமுறை நாட்டின் கலாசாரம் மற்றும் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கமையவே தயாரிக்கப்படவேண்டும். இது தொடர்பில் எமது நாட்டில் பரந்துபட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை சர்வதேசம் ஏற்க வேண்டும். பக்கச்சார்பின்றி இலங்கை தொடர்பில் பார்வையைச் செலுத்த வேண்டும் என்றார்.

Spread the love