ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் நியாயமற்றது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்தத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த இலங்கை கோரும் எனவும் கூறியுள்ளார். இந்தத் தீர்மானம் இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது. தீர்மானத்துடன் நாங்கள் உடன்படப்போவதில்லை. நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இதை எதிர்கொள்வோம். சமரசம் செய்ய முடியாத விடயங்கள் தீர்மானத்தில் உள்ளன.
நட்பு நாடுகளை இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கக் கோருவோம் சலுகைகளில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், புதிய தீர்மானம் சர்வதேச வர்த்தகத்தில் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. இலங்கை முன்னர் வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் வரிச்சலுகை நீக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அச்சுறுத்தியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை தொடர்பான தீர்மான வரைவு மனித உரிமைகள் பேரவை செயலகத்தில் கடந்த வாரம் முறைப்படி கையளிக்கப்பட்டது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலில் முன்னேற்றம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகள் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு இந்த தீர்மானம் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தத் தீர்மானம் நியாயமற்றது என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நேற்று வியாழக்கிழமை எக்கனமி நெக்ஸ்ட்டிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம் இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது. தீர்மானத்துடன் நாங்கள் உடன்படப் போவதில்லை. நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இதை எதிர்கொள்வோம். சமரசம் செய்ய முடியாத விடயங்கள் தீர்மானத்தில் உள்ளன. நட்பு நாடுகளை இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கக் கோருவோம் எனவும் அலிசப்ரி குறிப்பிட்டார். மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் போர்க் குற்றசாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை இலங்கைக்கு கடும் அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த அலுவலகம் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்ட போதிலும் பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2009 இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மக்கள் அரச படைகளால் கொல்லப்பட்டதாக இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள், பொறுப்புக்கூறல் தொடர்பில் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்துவருகிறது. சில மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே போரில் முன்னணியில் நின்று தலைமை தாங்கிய சில இராணுவ அதிகாரிகளுக்கு அவர்களின் குற்றச் செயல்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பயணத்தடை விதித்துள்ளன. கனடாவும் ஜேர்மனியும் இலங்கை இராணுவ அதிகாரிகளை அந்த நாடுகளில் தூதரகப் பணிகளில் ஈடுபடுத்த மறுத்துள்ளன. இந்நிலையில் தற்போதைய தீர்மானம் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதை விரும்புவதால் இது கவலைக்குரியது என்று அமைச்சர் சப்ரி கூறினார்.