ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் வெளிநாடுகளில் வழக்குத் தொடர்வதற்காக போர்க் குற்றங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் ஆணையை வலுப்படுத்தும். இத் தீர்மானமானது உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை நல்லிணக்கம் , பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் , பொருளாதார நெருக்கடி , ஊழலின் மனித உரிமைகள் தொடர்பான தாக்கம் உட்பட கண்காணிக்கவும் அறிக்கையை மேம்படுத்தவும் அழைப்பு விடுத்திருக்கிறது.
அத்துடன் 2025ல் இடம் பெறும் பேரவையின் 57வது அமர்வில் விரிவான அறிக்கையுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வாய்வழி புதுப்பிப்புகளை முன்வைக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு விடுத்துள்ளது இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச ஒற்றுமை தேவை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவலியுறுத்திவரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு இந்த தீர்மானம் ஒரு கண்டனமாக அமையுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.