ஐ.பி.எல். 2022 ஸ்பொன்ஸர் உரிமத்தை பெற்றது TATA

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் டைட்டில் ஸ்பொன்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து அதன் டைட்டில் ஸ்பொன்சர் உரிமத்தை பெறுவதற்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நடைபெறும்.


ஐ.பி.எல் தொடங்கிய போது டிஎல்.எஃப் பெப்சி ஆகிய நிறுவனங்கள் டைட்டில் ஸ்பொன்சராக இருந்தன. இதன்பின் 2016 இல் இருந்து சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் ஐ.பி.எல்லின் டைட்டில் ஸ்பொன்சராக இருந்து வந்தது. இதற்காக அந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.440 கோடி பிசிசிஐ-க்கு செலுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியின் புதிய டைட்டில் ஸ்பொன்சராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. இதனை ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார்.

Spread the love