ஜூலை 2021 இல் இலங்கைக்கு ஆதரவாக சில ஒட்சிசன் செறிவூட்டல்களை நன்கொடையாக வழங்கியிருந்த பெல்ஜியத்தில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்பான எல்லைகளற்ற மருத்துவமனையில் (ஹொஸ்பிடல் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் – எச்.எஸ்.எப் / இசட்.இசட்.ஜி), தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக மற்றுமொரு ஒட்சிசன் செறிவூட்டித் தொகுதியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
எல்லைகளற்ற மருத்துவமனையின் பணிப்பாளர் திரு. ஸ்டீபன் லண்டோஸ், பிரஸ்ஸல்ஸில் உள்ள தூதுவர் கிரேஸ் ஆசிரவாவதத்திடம் ஒட்சிசன் செறிவூட்டிகளைக் கையளித்தார். இந்த நிகழ்வின் போது தூதரகத்திற்கு உதவிய அன்ட்வெர்ப்பில் உள்ள இலங்கையின் தூதுவர் மொனிக் டி டெக்கரும் இந்த நிகழ்வின் போது உடனிருந்தார்.