சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷ்ய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கிடையில் ரஷ்ய உக்ரைன் போர்காரணமாக பிளவு ஏற்படலாம், என்கிற விண்வெளி நிறுவனத்தின் எச்சரிக்கையை மறுத்து ரஷ்ய அமெரிக்க ஒத்துழைப்பில் நாசாவில் எந்த மாற்றமுமில்லை அவர்களது கூட்டுறவு நிலைக்கும் என்கிறார், ஜோயல் மொண்டல் போனா,
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அதில் பிரதானபணிகளில் அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷியாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் எனவும், இதனால் 500 டன்னுக்கு மேல் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் பூமியில் விழும் எனவும் ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் திட்ட மேலாளர் ஜோயல் மொண்டல்பானோ பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்க – ரஷியா ஒத்துழைப்பின் அடிப்படையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. நாங்கள் இன்று இருப்பதைப் போலவே இனி வரும் நாட்களிலும் தொடர திட்டமிட்டுள்ளோம். சர்வதேச விண்வெளி மையம் இயங்குவதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் தேவை” ஆகவே விண்வெளி மையத்தைப்பொறுத்தவரை எம்மிடம் ஒத்துழைப்பு ஒன்று பட்டுக் காணப்படும் என்றும் கூறினார்.