ஒன்ராறியோவில் இன்று 2,400 க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஏழு மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாகும்.
இதன்படி மாகாணம் இன்று 2,421 புதிய நோய்த்தொற்றுகளை பதிவு செய்துள்ளது, இது நேற்றைய 1,808 தொற்றுகளில் இருந்து கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் 2,584 புதிய தொற்றுக்கள் பதிவாகிய கடந்த மே 15ம் திகதியின் பின்னர் பதிவாகிய ஒருநாளின் அதிக தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் மாகாணத்தில் திங்கள்கிழமை 1,476 புதிய தொற்றுக்களும், செவ்வாய்கிழமை 1,536 மற்றும் புதன்கிழமை 1,429 தொற்றுக்களும் பதிவாகியுள்ளன.
சமீபத்திய தொற்றுக்களில், 1,530 தொற்றுக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களிடையே இருப்பதாகவும், 686 தடுப்பூசி போடப்படாதவர்கள், 72 பேர் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் 133 பேருக்குத் தடுப்பூசி நிலை தெரியாது இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.