எதிர்காலத்தில் ஒரு லட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்டத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஓமானில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் அது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, எதிர்காலத்தில் நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய எரிவாயு தாங்கிய கப்பல் தொடர்பில் நாளை அறிவிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயுவின் விலை
அதேநேரம், லிட்ரோ எரிவாயுவின் விலையை 210 ரூபாவால் அதிகரிக்க அனுமதி கோரியுள்ளதாகவும் அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எரிபொருள் தாங்கிய இறுதி கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. மேலும் சுமார் 40 ஆயிரம் மெற்றிடன் எரிபொருள் தாங்கிய கப்பலே நாட்டை வந்தடையவுள்ளது.