ஒரே போட்டியில் 18 மஞ்சள் அட்டை உலகக் கிண்ணத்தில் புதிய சாதனை

கட்டார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தில், ஆர்ஜென்டீனா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கால் இறுதிப் போட்டியில் மஞ்சள் அட்டைகளால் புதிய சாதனை படைக்கப்பட்டது. இப்போட்டியில் ஆர்ஜென்டீனா அணி பெனல்ட்டி முறையில் 4:2 விகித்தில் வென்றது. இப்போட்டியின்போது 18 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. ஆர்ஜென்டீனா குழாமில் 8 வீரர்களுக்கும் அவ்வணியின் பயிற்றுநர் லயனல் ஸ்காலோனி உதவிப் பயிற்றுநர் ஆகியோருக்குமாக 10 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.

அதேவேளை நெதர்லாந்து குழாமில் 7 பேருக்கு மஞ்சள் அட்டைகாட்டப்பட்டது. அவர்களில் டென்ஸில் டம்பிரீஸக்கு 2 மஞ்சள் அட்டை காட்டப்பட்டதையடுத்து, சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டது. ஸ்பானிய மத்தியஸ்தர் அன்டோனியோ மெத்தேயு லாஹோஸினால்

இம் மஞ்சள் அட்டைகளும் சிவப்பு அட்டையும் காண் பிக்கப்பட்டன. உலகக் கிண்ணப் போட்டியொன்றில் 18 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டமை புதிய சாதனையாகும். இதற்கு முன்னர், 2006 ஆம் ஆண்டு போர்த்துக்கல், நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது 16 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டமையே சாதனையாக இருந்தது.

இதேவேளை, 5 தடவைகள் உலகசம் பியனான பிரேஸிலை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில், குரோஷியா பெனல்டி முறையில் 3:2 கோல் விகிதத்தில்வென்றன.

ஆர்ஜென்டீனா:
மார்க்கோஸ் அக்யூனா, கிறிஸ்டியன் ரொமீரோ, லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ், லியண்ட்ரோ பரதேஸ், லயனல் மெஸி, நிக்கலஸ் ஓட்டாமெண்டி, கொன்ஸாலோ மொன்டியல், ஜேர்மான் பெஸெல்லா, பயிற்றுநர் லயனல் ஸ்காலோனி, உதவிப் பயிற்றுநர் வோல்ட்டர் சாமுவெல்.

நெதர்லாந்து:
ஜூரியன் டிம்பர், வூட் வெக்ஹோர்ஸ்ட், மெம்ஃபிஸ் டிபே, ஸ்டீவன் பேர்கிஸ், ஸ்டீவன் பேர்க்வின், நொவா லங், டென் ஸில் டம்ஃப்ரீஸ் (2ஆவது மஞ்சள் அட் டையுடன் சிவப்பு அட்டை).

Spread the love