இருபது இந்திய இராணுவத்தினரின் உயிரைக் பலிகொண்ட கல்வான் பள்ளத்தாக்கு (Galwan Valley) மோதலில் தொடர்புடைய ஒரு இராணுவத் தளபதி, சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்திச் சென்றது இந்தியாவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற மேற் கூறப்பட்ட சண்டையில் பங்குபற்றிய இராணுவ வீரரொருவர், ஒலிம்பிக் தீபத்தை தங்கிச் சென்றிருந்தார். இது தொடர்பான சர்ச்சையில், பெய்ஜிங்கீழ் ஆரம்பமாகியுள்ள 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை இந்திய இராஜதந்திரிகள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக கருது வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியொருவர், தமது இராஜதந்திரிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிப்பர் என்பதை உறுதிப்படுத்தியதுடன், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை சீனா அரசியலாக்கியது வருந்தத்தக்கது என கூறினார்.
கடந்த புதனன்று, சீன மக்கள் விடுதலைப் படையின் சிப்பாய் குய் ஃபாவோ (Qi Fabao) பாரம்பரிய ஒலிம்பிக் தீப்பந்த ஓட்டத்தில் பங்கேற்றதன் பின்னர் இந்த சர்ச்சை ஆரம்பமாகியது.
இந்திய சீன நாடுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சர்ச்சைக்குரிய லடாக் பிரதேசத்தின் ஒரு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) நடந்த மோதலில் சண்டையிட்ட இராணுவப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக குய் இருந்தார்.
மேற்கூறப்பட்ட சண்டையில், இவர் தலையில் பலத்த காயம் அடைந்திருந்தார். ஆனால் அவர் கடந்த டிசம்பரில் (சீன) பிராந்திய ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவியிடம் (CCTV)” போர்க்களத்திற்குத் திரும்பி மீண்டும் போராடத் தயார்” என்று கூறியதைத் தொடர்ந்து, சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் (Global Times), குய்யை “ஹீரோ” என்று வர்ணித்திருந்தது. குளிர்கால ஒலிம்பிக்கில் தீப்பந்தம் ஏந்திய 1,200 நபர்களில் குய்யும் ஒருவர்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, அதன் தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வேம்பட்டி (Shashi Shekhar Vempati ) ட்விட்டரில், பெய்ஜிங் 2022 இன் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களையும் இந்திய தேசிய ஒளிபரப்பாளரான தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாது என்று கூறினார்.