இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவை இந்தியாவின் தேவைக்காக ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். எனினும், இலங்கை விவசாயிகள் எதிர்நோக்கும் உரத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உரத்தொகை கிடைத்ததும் அவற்றை உடனடியாக 2, 3 நாட்களுக்குள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சிறுபோகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு பொதி யூரியா உரத்தை 10,000 ரூபாவிற்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.