ஓமான் அரசாங்கத்தால் இலங்கைக்கு கடனுதவியாக வழங்கப்பட்ட 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவானது நேற்றுமுன்தினம்(27) பிற்பகல் கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்டதாக எரிவாயு நிறுவனத்தின் தொடர்புடைய லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
லிட்ரோ நிறுவனத்திடம் தற்போது போதியளவு எரிவாயு கையிருப்பு மீதமிருப்பதால் நாளொன்றுக்கு 100,000 சிலிண்டர்கள் வீதமாக எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கெரவலப்பிட்டி எரிவாயு முனையத்தில் உற்பத்தியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை என்கிற காரணத்தால் பிற்பகலுக்குள் சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் ஆயத்தமாக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிவாயுவைத் தொடர்ந்து தடையின்றி விநியோகம் செய்வதன் மூலம் இந்த எரிவாயு தட்டுப்பாட்டுக்கான தற்காலிக சர்ச்சயை விரைவில் முடிவுக்கு கொண்டு வர முடியும் என லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.