அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக வரையறுக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கை இன்று(14) வௌியிடப்படவுள்ளது.
அதற்கமைவாக, அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக மட்டுப்படுத்தப்படுமென அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பல அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தமது சேவை தொடர்பான ஓய்வு வயதை 60 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் பதிவாகுவதாக அரச நிறுவனங்களின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு இடம்பெற்றால் நீர்ப்பாசனத் திணைக்களம், ரயில்வே திணைக்களம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுமென அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.