இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை மேலும் அதிகரித்துள்ளன.
இதன் மூலம் கடன் அட்டைக்கான வருடாந்த வட்டி விகிதம் 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய வங்கியின் நாணயச் சபையானது,கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் விதிக்கப்பட்ட உச்ச வட்டி விகிதத்தை நீக்க தீர்மானித்ததை தொடர்ந்து ,வட்டி விகிதங்கள் 18 வீதத்தில்லிருந்து 24 வீதமாகவும் , அதனை தொடர்ந்து 30 வீதமாகவும் , இப்போது மீண்டும் 36 சதவீதமாகவும் வங்கிகள் தமது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.