நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்வதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாட்டு செயலாற்றத்தின் அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தமையே இதற்குக் காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையான தாக்கத்தை கொண்டிருந்தாலும் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சாதகமாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.
ஜுலை மாதத்தில், பணவீக்கம் 6.3 ஆக காணப்பட்டது. இந்தநிலையில், 4 இற்கும் 6 இற்கும் இடைப்பட்ட அளவில் உள்ள பணவீக்கத்தை மாத்திரமே இலங்கையால் தாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கடன் மறுசீரமைப்பு செயன்முறை நிறைவடைந்ததன் பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தில் இருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.