கடன் மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பித்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரான்ஸுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, France 24 தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.