நாட்டின் கடனாளிகள் கோரும் விளக்கங்களை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படவிருந்த கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகள் ஒத்திவைத்துள்ளனர்.
ஒரு தசாப்தத்தில் நாட்டின் மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்து வெளியேறும் பாதையில் ஒரு படியாக, சர்வதேச நாணய நிதியத்துடன் பூர்வாங்க 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பைப் பெற்ற பின்னர், இலங்கை செப்டெம்பரில் பேச்சுவார்த்தைகளை முறையாகத் தொடங்கியது.
ஆனால் நிதி வழங்கப்படுவதற்கு முன்னர் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.