கடற்றொழில் துறையை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக கடலில் விபத்துக்குள்ளாகும் படகுகளுக்கு உதவி வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. அனைத்து மீன்பிடி துறைமுகங்களுக்கு அருகாமையில், கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையணி தற்பொழுது கடமையில் ஈடுபட்டுள்ளன. வெளிநாடுகளில் கைப்பற்றப்படும் உள்ளூர் கடற்றொழில் படகுகள் மற்றும் நாட்டின் கடல் எல்லையை மீறும் கடற்றொழில் படகுகள் தொடர்பில் இந்த வேலைத்திட்டத்தின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.