இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. உணவு, எரிபொருள் நெருக்கடி நிலை மற்றும் நாட்டில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் இதற்கு நேரடி காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார். அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் சுற்றுலாத் துறையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சவாலுக்குள்ளாகியுள்ளது. அதேசமயம் பழைய நிலைமைக்கு சுற்றுலாத்துறை இயல்பு நிலையை அடைவதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என கூற முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.