உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறும் நாட்டில் காணப்படும் நெருக்கடிக்கு தீர்வு வழங்குமாறும் கோரி கத்தோலிக்க மக்கள் மற்றும் சிவில் அமைப்பினர் நேற்று கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்பாக எதிர்பில் ஈடுப்பட்டனர்.
நீதிக்கான பேரணி எனும் தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கட்டுவாப்பிட்டிய மயானத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டதன் பின்னர் பேரணியாக மக்கள் கட்டுவாப்பிட்டிய செபஸ்டியன் ஆலயத்தை அடைந்தனர்.
பின்னர் இவர்கள் பேரணியாக கட்டுவாப்பிட்டிய செபஸ்டியன் ஆலயத்தில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்றனர். இந்த நீதிக்கான போராட்டத்திற்கு மக்கள் வீதியின் இரு மருங்கிலும் இருந்து ஆதரவை வௌிப்படுத்தினர், அதன் பின்னர் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் அதிகளவான மக்களின் பங்களிப்புடன் விசேட ஆராதனை இடம்பெற்றது.