காங்கேசன்துறை – காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரிக்கான கப்பல் சேவைகள் விரைவில்

காங்கேசன்துறை – பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் போன்றவற்றிற்கு இடையிலான சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்கும் தன்னுடைய முயற்சிகளும் விரைவில் சாத்தியமாகும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான சேவைகள் நேற்று மீண்டும் ஆரம் பிக்கப்பட்ட நிலையில் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை, காரைக்கால் – காங்கேசன்துறை கப்பல் பயணத்துக்கு சுமார் 22 மணி நேரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தைச் சுற்றி யுள்ள கடல் ஆழமாக இல்லாததால் பாண்டிச்சேரி -காரைக்கால் துறைமுகம் சிறந்த தேர்வாக இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை – பாண் டிச்சேரி மற்றும் காரைக்கால் போன்றவற்றிற்கு இடையிலான சரக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டால் மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருளையும், உரம், பாம் எண்ணெய், மருந்துப் பொருட் கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் நேரடியாக. வடக்கிற்கு கொண்டு வர முடியும். இதன்மூலம் போக்குவரத்துச் செலவுகள் குறைந்து பொருட்களின் விலைகளும் குறைய சாத்தியம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love