தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரோகித் சர்மாவுக்கு பதிலாக 18 பேர் கொண்ட இந்திய அணியில் பிரியங்க் பஞ்சால் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மும்பையில் ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட பயிற்சி நடவடிக்கையின் போது ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தென்னாபிரிக்காவுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக பி.சி.சி.ஐ. உறுதி செய்துள்ளது.