ஐ.பி.எல்லின் 15வது சீசனில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில், ஐ.பி.எல் நிர்வாகக்குழு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்சி உருவாக்கி அதனை கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறச் செய்துள்ளனர்.
ஐ.பி.எல்லில் இடம் பெற்று இருந்த 10 அணிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட மற்றும் கிட்டத்தட்ட 66X44 என்ற மீற்றர் அளவு கொண்ட இந்த கிரிக்கெட் ஜெர்சியை கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி அறிமுகம் செய்து வைக்கவே அதற்கான கின்னஸ் உலக சாதனை சான்றிதழை பி.சி.சிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா மற்றும் ஐ.பி.எல் தலைவர் பிரஜேஷ் படேல் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.