கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை – முசுரம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (12/01) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், எரிவாயு அடுப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.