கௌதாரிமுனையில் மீண்டும் ஓர் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு சீன நாட்டவர்கள் சிலர் உள்ளூர் மீனவர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் கௌதாரிமுனை பகுதியில் இயங்கிய கடல் அட்டைப் பண்ணை கடந்த ஏப்ரல் மாதம் அகற்றப்பட்டது. அவ்வாறு அகற்றப்பட்ட பண்ணை இருந்த இடத்தை அண்டி மீண்டும் ஓர் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு சீன நாட்டவர்கள் சிலரும் தென்னிலங்கைவாசிகளும் முனைப்பு காட்டுகின்றனர்.
இதற்காக சீனர்களும் தென்னிலங்கை வர்த்தகர் ஒருவருமாக உள்ளூர் மீனவர் சங்கத்தின் உதவியை நாடி முன்பிருந்த பண்ணை , அதன் நிலவரம் தொடர்பில் கேட்டு அறிந்துகொண்டுள்ளதோடு மீண்டும் தம்மால் ஓர் பண்ணை அமைத்தல் பிரதேச மீனவ சங்கத்தின் ஒப்புதல் கடிதம் வழங்க முடியுமா என வினவியுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு அமைத்த பண்ணை பெரும் சர்ச்சைக்குள் சிக்கியதன் பின்பே இந்த ஆண்டு அகற்றப்பட்டது. இதன் காரணமாக புதிய பண்ணைக்கு ஒப்புதல் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் மீண்டும் அதே பகுதியில் சீனர்களால் புதிய கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.