வடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில், இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்ததாகக் கூறப்படுகின்றது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை குறித்து, தென்கொரியா மிக உன்னிப்பாக அவதானித்து, ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது குறித்தே, தென்கொரியா கண்காணிப்பதாகத் குறிப்பிடப்படுகின்றது. சர்வதேச நாடுகளின் கண்டனங்களையும் மீறி, கடந்த சில வாரங்களில் வடகொரியா 4 முறை, புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.