குரங்கு அம்மை தொற்றாளர்களுக்கு சிகிச்சைக்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ள IDH வைத்தியசாலை

குரங்கு அம்மை(Monkeypox) தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் எனப்படும் IDH வைத்தியசாலை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் குரங்கு அம்மை தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  பதிவாகிய தொற்றாளர்கள் இருவரும் துபாயிலிருந்து நாட்டை வந்தடைந்தவர்களாவர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான இருவரும் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Spread the love