இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை கருத்தில் கொண்டு இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக தரம் குறைப்பதற்கு உலக வங்கி முன்மொழிந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கடன் மறுசீரமைப்பிற்காக கடனாளிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் நேர்மறையான கருத்துக்களுடன் பதிலளிக்கப்படவில்லை.
குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்படுவது, நெருக்கடியைச் சமாளிக்க உதவி மற்றும் குறைந்த வட்டிக் கடன்களைப் பெற கூடுதல் நன்மையாக இருக்கும் என்றும், இலங்கை அரசாங்கம் தற்போது இந்த விருப்பத்தை பரிசீலித்து வருவதாகவும் இலங்கை அதிகாரிகள், உலக வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இலங்கை குறைந்த வருமானம் கொண்ட நாடு என்று தரப்படுத்தப்பட்ட போதிலும், நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக சாதகமானதாக இருப்பதால், அதன் நீண்ட கால தாக்கம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது.