குறைந்த வருமானம் பெறும் சமுகத்திருக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ள ஜப்பான் அரசாங்கம்

குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளம் சமுகத்திருக்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது.

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பான் தூதுவர் மிசு கொஸியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ஜப்பான் தூதுவர் மிசு கொஸி, இதனை தெரிவித்தார்.

அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பொழுது இதன் அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

ஜப்பான் தூதுவர் அதற்கு மிக சாதகமான பதிலை வழங்கினார். இதன்மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்புகளை தேடிச்செல்லும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த வாய்ப்புக்கள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love