வங்காளதேசம் அணிக்கு எதிராக சிட்டாகாங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் 210 ஓட்டங்களை குவித்தார். இதில் 126 பந்துகளில் அவர் இரட்டை சதம் அடித்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக பதிவானது.
இதற்கு முன்னர் மேற்கிந்தியதீவுகள் அணியின் வீரர் கிரிஸ் கெயில் ஒரு நாள் போட்டியில் 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை கிஷன் முறியடித்துள்ளார். மேலும் 2011 ஆண்டு மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 112 பந்துகளில் இந்திய வீரர் சேவாக் 150 ஓட்டங்களை அடித்திருந்தார். இதன் மூலம் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக 150 ஓட்டங்கள் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். தற்போது அதை முறிடித்துள்ள கிஷன், குறித்த போட்டியில் 103 பந்துகளை எதிர்கொண்டு 150 ஓட்டங்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.