கேகாலை சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் -ஐனாதிபதி

கேகாலை மாவட்டம்- ரம்புக்கனை வன்முறை தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.


மேலும் வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்து குடிமக்களையும் டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார். அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை குடிமக்களின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும், சம்பவம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை பொலிஸ் மேற்கொள்ளும் என்றும், சம்பவம் குறித்து தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறியுள்ளார். அனைத்து குடிமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார். சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் கூறியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Spread the love