கேணியை புனரமைப்பதே மக்கள் தீர்மானம் ஆகியது..!

அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனைப் பிரிவிலுள்ள திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தில் சர்ச்சைக்குரிய கேணி மண் நிரப்பு விவகாரத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்த பொதுமக்கள், அந்த இடத்தை மீண்டும் தோண்டி, தீர்த்தக்கேணி அமைக்கவேண்டுமென தீர்மானம் எடுத்துள்ளனர்.

அத்தீர்மானத்தை எழுத்து வடிவில் 3 நாள் கால அவகாசம் கேட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் பொதுமக்கள் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர். அக்காணியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கும் அருகிலுள்ள சலவைத் தொழிலாளர் கட்டடத்தை புனரமைத்துத்தரவுமே அக்காணியை மண்போட்டு நிரப்பியதாக அட்டாளைச்சேனை தவிசாளர் முன்னர் நடந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

மக்களின் தீர்ப்பின் பிரகாரம் கேணி விவகாரம் தீர்மானிக்கப்படும் என்று முன்னமே கிராம மக்கள் பிரதிநிதிகளால் பிரேரிக்கப்பட்ட நிலையில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு மக்கள் இணங்கியிருக்கவில்லை, மாறாக திராய்க்கேணியின் இருப்புக்கு காரணமாயமைந்த சலவைத்தொழிலாளர் கையாளும் அக்கேணியை மீண்டும் தோண்டி, புனரமைத்து தீர்த்தக்கேணியாக பாவனைக்குட்படுத்த மக்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.

Spread the love