அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார்.
நாவலப்பிட்டியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் பேசுகையில், “இன்று நாட்டில் நடைபெறும் விடையங்களை புரிந்துகொள்ள முடியாத பலர், இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் வாழ்கின்றனர். அவர்களில் இலங்கை ஜனாதிபதியும் ஒருவர். அவரின் சுதந்திர தின உரையைச் செவிமடுக்கையில் சிரிப்புத்தான் வந்தது. வெளிநாடுவாழ் இலங்கையர்களை, இங்கு நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறார். ஆனால் அவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். புலம்பெயர் தமிழர்களிடம் பணம் உள்ளது. ஆனால்கொட்டபாய ஆட்சியில் அவர்கள் இங்கே வருவார்களா ? வரமாட்டார்கள்” என்று கூறிய அவர்” சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சி அமையும்போது வெளிநாட்டு முதலீடுகளை உள்ளிருப்போம் என்றார்.
இலங்கையில் வசிக்கும் பல்லின மக்கள் சமூகங்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த நாடு உருப்படும் என்று அவர் மேலும் கூறினார்.