கொரியாவின் இலங்கைக்கான தூதுவர் வூஜின் ஜியோங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். கொரிய சீமோல் அமைப்பின் தலைவர் லீ ஸோங் ஜொங் மற்றும் சீமோல் அமைப்பின் இலங்கைப் பணிப்பாளர் சோய் சுங் வூ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சீமோல் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் விவசாய உற்பத்திகளை விருத்தி செய்தல், கிராமிய மக்களை வலுப்படுத்தல் போன்ற சமூக அடிப்படையிலான திட்டங்கள் தொடர்பில் சீமோல் அமைப்பின் தலைவர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.
அதற்கமைய, விவசாயம் உள்ளிட்ட ஏனைய துறைகளிலான அபிவிருத்திகள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை விருத்தி செய்துகொள்ளக் கூடிய முறை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும் கலந்துகொண்டார்.