கொரோனா வைரஸ் அருகில் இருந்தால் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கண்டறியும் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய முககவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேச்சர் பயோடெக்னாலஜி அறிவியல் இதழில் வெளியான செய்தியில், பிரெஞ்சு விஞ்ஞானிகள் அதிநவீன நோய்களை கண்டறியும் சென்சார்கள் பொருத்திய கவசங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் அதனை இந்த முககவசத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து தகவல் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து முககவசம் அணிந்தவர்கள் அந்த இடத்தை விட்டு விரைவில் நகர்ந்து தப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.