கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று (12/01) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதியன்று இதன் பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹிந்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் பிரபல்யமான துறைமுகங்களின் தரவரிசை பட்டியில் இலங்கை 23 ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், 2035 ஆம் ஆண்டை அடையும் போது கொழும்பு துறைமுகத்தை ஏராளமான கொள்கலன்களை கையாளும் பிரபல்யமான துறைமுகமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.