கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகள் பல்கலைக்கழக வேந்தரிடம் பட்டம் பெறாது புறக்கணிப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சம்பிரதாய பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை (Muruththedduve Aananda Thero) 4 பட்டதாரிகள் பொது மேடையில் வைத்து அவமதித்தமை பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகி வருகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் என்பன அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழைப் பெற சிலர் மறுத்துள்ள நிலையில், மாணவர்கள் சிலர் கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளன.

Spread the love