கோட்டாவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை – பிரித்தானிய பாராளுமன்றில் யோசனை

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் சேர் எட்டேவி நேற்று முன்தினம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசின் ஊழல், அதிகரித்த பாதுகாப்பு செலவுகள் மற்றும் கொடூரமான பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றால் இலங்கையில் பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள ஜனநாயகவாதிகளை ஆதரிப்பதற்காக ஒரு முழுமையான பொருளாதார மற்றும் அரசியல் தீர்விற்கு பிரித்தானியா சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று டேவி பரிந்துரை செய்துள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் உட்பட நாட்டிலுள்ள அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான தீர்வை உள்ளடக்கியதாக அவர் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

Spread the love