முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (06) அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இவர்களுக்கு எதிராக குறித்த இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் சாம்பியன் ஜூலியன் போலிங் உள்ளிட்டோரால் அதில் ஒரு அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்ட்டிருந்ததுடன், மற்றைய மனுவை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் மஹீம் மெண்டிஸ் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்திருந்தனர்.
இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.