எதிர்வரும் நாட்களில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டத்தொடரில் அழைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் திகதி புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகமும், பெப்ரவரி 24ஆம் திகதி இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனமும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அபிவிருத்தி லொத்தர் சபை மார்ச் 10ஆம் திகதியும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மார்ச் 11ஆம் திகதியும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 23ஆம் திகதி அரச ஈட்டு முதலீட்டு வங்கியும், மார்ச் 24ஆம் திகதி ஏற்றுமதி அபிவிருத்தி சபையும், மார்ச் 25ஆம் திகதி மக்கள் வழங்கியும் அழைக்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான கோப் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றதுடன், இதில் கோப் குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.