சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய குணசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

புராணக் கதையான சகுந்தலையின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. சகுந்தலை வேடத்தில் சமந்தா நடிக்கிறார். முதல் பார்வை போஸ்டரில் வனம் ஒன்றில் மான்கள் மற்றும் பறவைகள் சூழ வெள்ளை உடையில் சமந்தா அமர்ந்திருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
