உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் கடவுச்சீட்டின் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வந்து இறங்கிய பின் விசா பெறும் முறையில் சென்றுவர முடிகிறது என்பதன் அடிப்படையில் கடவுச்சீட்டின் சக்தி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜப்பான் கடவுச்சீட்டு மூலம் உலகம் முழுவதும் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாட்டு கடவுச்சீட்டுகள் மூலம் 192 நாடுகளுக்கு இவ்வாறாக செல்லலாம். ரஷ்ய கடவுச்சீட்டின் இடம் இந்தப் பட்டியலில் 50 ஆகவுள்ளது. ரஷ்ய கடவுச்சீட்டு மூலம் 119 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். ஆனால், ரஷ்ய படையெடுப்புக்கு உள்ளான உக்ரைன் இந்த தரவரிசையில் ரஷ்யாவை முந்தியுள்ளது. உக்ரைனிலிருந்து 144 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். இந்த கடவுச்சீட்டு பட்டியலில் இந்தியா 87 ஆவது இடத்தில் உள்ளது.