சமூக நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக போலியான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான இயலுமை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 37 இலட்சம் விண்ணப்பங்களில் 02 இலட்சம் விண்ணப்பங்கள் இதுவரை பரிசீலிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பரிசீலனை நடவடிக்கைகளுக்காக வருகை தரும் அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனைகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.